×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திம்பம் மலைப்பாதையில் இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறையினர் விசாரணை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிறுத்தைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வதும் சாலையோர தடுப்புச் சுவரில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை திம்பம் மலைப்பாதை 11வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை கண்ட வனத்துறை ஊழியர்கள் உடனடியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை ஆய்வு செய்து வருகின்றனர். வனத்துறை கால்நடை மருத்துவரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தபின் இறந்து கிடக்கும் சிறுத்தை நோய்வாய்ப்பட்டு இருந்ததா என்பது குறித்து  தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : investigation ,Forest Department ,Thimpam Hills: Forest Investigation , Dead leopard, Thimpam , Forest, investigation
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...