×

பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.: வரும் 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 21ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

*பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப கார்டு உள்ளவர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

*கடந்த 9-ந்தேதி முதல் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வினியோகிக்கப்படுகிறது.

*நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் வாங்கி செல்ல வசதியாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதனால் தள்ளு-முள்ளு எதுவும் இல்லாமல் வரிசையில் நின்று மக்கள் வாங்கி சென்றனர்.

*ஒரு கோடியே 97 லட்சம் பேர் அரிசி பெறக்கூடிய ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

*அவர்களில் ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு நேற்றுடன் வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ஜனவரி 21ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.

*இதுவரையில் வாங்காதவர்கள், வெளியூர் சென்றவர்கள், முறையான ஆவணங்களை கொடுக்காமல் இருந்தவர்கள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல்பரிசு வினியோகிக்கப்படும்.

*இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நேற்று வரை பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு 94 சதவீதம் கொடுக்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கு ஜனவரி 21ம் தேதி மாலை 6 மணி வரை வழங்கப்படும். விடுப்பட்டவர்கள், வாங்காதவர்கள் உரிய ஆவணத்துடன் சென்றால் கிடைக்கும் என்றனர்.


Tags : Tamil Nadu , Ration Stores, Pongal Gifts, Distribution, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...