×

ராஜபாளையத்தில் சாலைகளில் கால்நடைகளால் காத்திருக்கும் விபத்து அபாயம்: நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் காத்திருப்பதாக எச்சரித்துள்ளனர். ராஜபாளையத்தில் முக்கிய சாலைகளில் மாடுகள், நாய்கள் சுதந்திரமாக உலா வருகின்றன. இரவு நேரங்களில் அறியாமல் வரும் வாகன ஓட்டிகள், கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், கால்நடைகளும் இறக்கின்றன. இவ்வாறு இறக்கும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துவதும் இல்லை. சில நேரங்களில் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். ஆனால், இந்த நடவடிக்கையை தொடர்ச்சியாக செய்வதில்லை.

இதனால், நகரில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ராஜபாளையத்தில் முக்கிய சாலைகளில் சுற்றும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. விபத்தில் சிக்கி உயிரிழக்கும் கால்நடைகளின் உடல்களை பல நாட்களாக அப்புறப்படுத்துவதில்லை. இதனால், துர்நாற்றம் வீசி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Livestock accident ,administration ,Rajapalayam , Rajapalayam, road, cattle, accident risk
× RELATED சித்திரை திருவிழாவிற்கு தனிநபர்...