×

சாத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அச்சுறுத்தும் இடிந்த சமையலறை கூடம்

சாத்தூர்: சாத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி சமையலறைக் கூடத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே, சிந்தபள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 15 ஆண்டுகளுக்கு முன் சமையலறைக் கூடம் கட்டப்பட்டது. இந்த கூடம் பராமரின்றி கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதில், தற்போது சமையல் பணி நடக்கவில்லை. தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து சாப்பாடு கொண்டு வரப்படுகிறது. இதனால், சத்துணவு பணியாளர்கள் அங்கும் இங்கும் அலைகின்றனர்.

சமையலறை கட்டிடம் அருகே ஆபத்தை உணராமல் தினசரி காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவியர் விளையாடுகின்றனர். சமையல் அறை கூடத்தை சீரமைக்ககோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்துக்கு பள்ளி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாணவ, மாணவியர் நலன் கருதி சமையலறைக் கூடத்தை சீரமைத்து, மீண்டும் உணவு சமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : kitchen ,Chatur ,Government School ,The Dilapidated Kitchen ,The Government School , Chatur, Government School, Kitchen
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...