×

திருப்பதி மங்கலம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்: பொதுமக்கள் கடும் அவதி

திருப்பதி: திருப்பதி மங்கலம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பதி நகரின் பிரதான சாலையாக விளங்குவது கரக்கம்பாடி சாலை, ரேணிகுண்டா சாலை. இதில் சென்னை, நெல்லூர், ஸ்ரீகாளஹஸ்தி, கடப்பா ஆகிய ஊர்களில் இருந்து திருப்பதிக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும்.  இந்த இரண்டு பிரதான சாலைகளையும்  இணைக்கும் மங்களம்  பகுதியில் வட்டார போக்குவரத்து கழகம் அலுவலகம்  எதிரே உள்ள  செட்டிபல்லி சாலையை உள்ளூர் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வழியில் வருவதால் போக்குவரத்து நெரிசலும் காலவிரயம் குறையும்.

ஆனால் இங்குள்ள மங்கலம் பகுதியில் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி வருவதால்  பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சில நேரங்களில் சமூக விரோதிகள் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் புகைமூட்டம்  அதிகமாகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Tirupati Mangalam ,Public , Tirupati Mangalam, Rubbish, Avadi
× RELATED வாட்டி வதைக்கும்...