×

கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : குற்றவாளி 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை: டெல்லியில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் 23 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கு பதவி உயர்வுக்கான பயிற்சி கும்பகோணத்தில் உள்ள  தலைமை அலுவலகத்தில் கடந்த 2018 வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்தது. இதற்காக டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னை டெல்லி  இளம்பெண் சென்னை வந்தார். சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு கடந்த வருடம் 2018 டிசம்பர் 2-ம் தேதி திருச்செந்தூர் விரைவு ரெயிலில் இரவு 10.30  மணிக்கு வந்தடைந்தார். பின்னர் டெல்லியில் இருந்து ஏற்கனவே கும்பகோணத்தில் அந்த வங்கிக்கு பயிற்சிக்கு வந்திருந்த தனது தோழிகளுக்கு தொடர்பு  கொண்டு ரெயில் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் மழை பெய்வதால் சிறிது நேரம் ரெயில் நிலையத்தில் காத்திருக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். நள்ளிரவு 12 மணி ஆகியும் தோழி வராததால்,  ரெயில் நிலையத்தில் ஆட்டோ எதுவும் இல்லாததால் மழையில் நனைந்தவாறு ரெயில் நிலையத்தை விட்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து,  அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேரில் ஒருவர் அந்தப் பெண்ணிடம் பேசி விடுதியில் கொண்டு விடுவதாகக்கூறி  மோட்டார் சைக்கிளில் அந்தப்  பெண்ணை அழைத்துக் கொண்டு நாச்சியார்கோவில் பைபாஸ் ரோட்டிற்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தொடர்ச்சியான, இச்சம்பவம் குறி்த்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி  என்பவருடைய மகன் வசந்த் (21) அன்னை அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (24), செட்டி மண்டபம் நகரைச் சேர்ந்த சிவாஜி மகன்  புருஷோத்தமன் (19), கும்பகோணம் அலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் ( 19) ஆகிய 4 பேரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை  செய்துள்ளது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மேற்கு போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 366 இளம்பெண் கடத்தல், 376  பாலியல் பலாத்காரம், 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கும்பகோணம் முதலாம் எண் நீதிமன்றத்தில்  அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், கும்பகோணத்தில் 2018-ம் ஆண்டில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பாலியல்  வன்கொடுமை செய்த வழக்கில் தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


Tags : sex scandal ,Delhi ,women ,Kumbakonam ,convicts ,Tanjore , Delhi woman rape case: four convicts sentenced to life imprisonment
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...