×

செங்குளம் கண்மாயை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே செங்குளம் கண்மாயைத் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே செங்குளம் கண்மாய் உள்ளது. சுமார் 127 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ள ஆனால் இங்கு தனிநபர் அதிகளவில் கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்து கண்மாயை தூர்வார முடியாத அளவிற்கு தலையீடு செய்து வருகின்றன, இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது மேலும் கிராமங்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் குடிநீர் பஞ்சம் வருவதற்கும் அறிகுறியாக இருந்துவருகிறது எனவே செங்குளம்கண்மாயை தூர்வாரி ஆக்கிரமிப்பு செய்துள்ளதனி நபர்களை அகற்றி பொதுப்பணித்துறை கண்மாயை முழுமையும் கரைகளை பலப்படுத்திடவும் மூல வைகை ஆற்று நீரை கண்மாய்களில் தேக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல கிராமசபை கூட்டங்களில் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அலைந்த வண்ணத்தில் உள்ளனர் ஆனால் இதுவரையும் கண்மாய் கரைகளை சில இடங்களில் பல படுத்திவிட்டு ஆக்கிரமிப்பை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ,ஆனால் இப்பணி இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது இதேபோல் கடமலை மயிலை ஒன்றியத்தில் 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய்களும் உள்ளது இவைகள் அனைத்தையும் விரைந்து ஆக்கிரமிப்பு அகற்றி பணி செய்திட வேண்டும் அவ்வாறு பணி செய்வதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chest, blindly
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...