கும்பகோணத்தில் வடமாநில பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தஞ்சை: வடமாநில பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வசந்தகுமார், புருஷோத்தமன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இயற்கை மரணம் அடையும் வரை 4 பேரும் சிறையிலேயே இருக்க வேண்டும் என தஞ்சை மகளிர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சிறையில் இருந்து 4 பேரின் சடலம் தான் வெளியே வர வேண்டும் என்றும் நீதிபதி எழிலரசி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் இரவு ரயிலில் கும்பகோணம் வந்தபோது பலாத்காரம் செய்யப்பட்டார்.

Tags : North-East ,Kumbakonam Four ,Kumbakonam , Kumbakonam North woman raped, 4 others sentenced to life imprisonment
× RELATED பரமக்குடியில் ஆசிரியரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை..: நீதிமன்றம் உத்தரவு