×

சிறுமி கமலியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் பாஃ ப்டா விருதுக்கு பரிந்துரை

சென்னை: மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிறுமி கமலியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று பாஃ ப்டா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த சாஷா ரெயின்போ என்ற இயக்குனர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள மீனவ குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கமலி ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறப்பாக சாதித்து வருவதை அடிப்படையாக கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

24 நிமிடங்கள் கொண்ட கமலி ஆவணப்படம் அட்லாண்டா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெற்றது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது. இந்நிலையில் தற்போது கமலி ஆவணப்படம் பாஃ ப்டா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

உருவான விதம்
அமெரிக்காவைச் சேர்ந்த ஜாமி தாமஸ் என்ற ஸ்கேட்டிங் வீரர் சில வருடங்களுக்கு முன்பு சிறுமி கமலிக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அதனை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் காலனி இல்லாமல் சிறுமி சறுக்கி விளையாடும் காட்சி இடம்பெற்றது. இந்த படத்தை பார்த்த  சாஷா ரெயின்போ ஸ்கேட்டிங் குறித்து ஆவணப்படம் எடுத்த போது இந்தியாவுக்கு வருகை தந்து சிறுமி கமலியை படம் பிடித்துள்ளார். மேலும் ஆவணப்படத்திற்கு கமலி என்ற தலைப்பை  சூட்டியுள்ளார்.


Tags : Kurali Kamali ,Kiriti Kamali , Sirumi Kamali, Documentary, Bafda Award, nomination
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100