×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய நாட்டுக்கோழி சந்தை: கோழி விலை கிடுகிடு உயர்வு

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டுக்கோழி சந்தை களை கட்டியது நோயில் கோழி அழிந்ததால் கோழி விலை கடும் உயர்வு. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதிகளில் வீடுகளில் நாட்டுகோழி வளர்ப்புக்கு வசதியாக அமைந்துள்ளது. இதை பயன்படுத்தி இங்குள்ள பெண்கள் அதிகம் பேர் தங்கள் வீடுகளில் சிறு தொழில் போல அதிகமாக நாட்டு கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்த கோழிகளை தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது போக மற்றவைகளை தமிழ் புத்தாண்டு, ஆடி பெருக்கு, ரம்ஜான், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விற்பனை செய்வர். இதில் கிடைக்கும் வருமானம் பண்டிகைகளுக்கு பயன்பெறும் வகையில் இருக்கும்.

இதனால் நாட்டு கோழி வளர்ப்பை கிராம பகுதி பெண்கள் அதிகம் விரும்பி செய்து வருகின்றனர். அப்படி வளர்க்கப்படும் கோழிகள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் பேராவூரணியில் நடைபெறும் வாரச்சந்தை தினத்தன்று பூக்கொல்லை கடைவீதியில் கோழி மட்டும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆட்டுக்கறியை விட மருத்துவ குணம் கொண்ட நாட்டுக்கோழி கறியையே அதிகமனோர் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இங்கு சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் கோழி விற்பனை செய்யவும், வாங்குவதற்கும் அதிகளவில் குவிந்து வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மொத்தமாக வாங்கி ஏற்றி சென்று விடுவது வழக்கமாக நடந்து வருகிறது. அதேநேரம் தற்போது நோயில் அதிகமான கோழிகள் அழிந்து விட்டது.

இதனால் விற்பனைக்கு கோழியின் வரத்து குறைந்து விலை கடும் உச்சத்தை தொட்டது. சாதாரணமாக ஒரு கிலோ எடை கொண்ட கோழி 300 முதல் 400 ரூபாய் வரை விற்பனையாகும். ஆனால் தற்போது 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்ந்தாலும் விற்பனைக்கு கோழி இன்றி கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் கவலை அடைந்துள்ளனர். தற்போது நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று பூக்கொல்லை கடைவீதியில் நாட்டுக்கோழி சந்தை நடந்தது. இங்கு திரளான பொதுமக்கள் வந்து கோழிகளை வாங்கி சென்றனர்.

Tags : Pongal festival, folk market
× RELATED தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4...