×

பொங்கல் பண்டிகை: மீண்டும் சூடு பிடிக்கும் மண் பானை விற்பனை... உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

பெரியகுளம்: ஆதிகாலங்களில் அனைத்து வீடுகளிலும் அனைத்து பயன்பாட்டிற்கும் மண்பானைகளை பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் சில்வர் மற்றும் ஈயப்பாத்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். மண்பானைகள் பயன்படுத்திய காலங்களில் மக்களுக்கு சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர்.  ப்ரிட்ஜ் உள்ளிட்ட நவீன பொருட்கள் வந்ததால் தண்ணீர் ஊற்றி வைக்க கூட மண்பானை பயன்படுத்தாமல் பிரிட்ஜ்களில் ஊற்றி வைத்தனர். இதனால் இந்த மண்பானை தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு மாறி சென்றனர்.
ஆனால், தற்போது பொதுமக்கள் ஏராளமான நோய்களால் தாக்கப்பட்டு சிரமப்பட்டதால் மீண்டும் மண்பானைகளைபயன்படுத்த துவங்கினர்.

இதனால் மீண்டும் மண்பானை தயாரிக்கும் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அத்துடன் பொங்கல் பண்டிகையும் வருவதால் பெரியகுளம் அருகே கைலாசபட்டி, கள்ளிப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்பானைகள் தயாரிக்கும் தொழில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்களிடம் ரூ.50 முதல் ரூ.200 வரை உள்ள மண்பானைகள், பொங்கல் பானைகள் குடிநீர் பானைகள், சமையல் பானைகள் என அனைத்து வகையான பானைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த மண்பானை தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மண் கிடைப்பதற்கு மிகவும் சிரமம் இருப்பதாகவும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான மண் எடுப்பதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று பானை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : festival ,manufacturers , Pongal festival, earthen pot, sale
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...