×

தேவாரம் மலையடிவாரத்தில் தென்னை மரங்களை அன்றாடம் நாசம் செய்யும் காட்டுயானைகள்

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தினந்தோறும் 3 காட்டுயானைகள் புகுந்து தென்னை மரங்களை பிடுங்கி எறிவது தொடர்கதையாகி வருகிறது. தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் தினந்தோறும் காட்டுயானைகள் அட்டகாசம் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சாக்குலூத்து, தீக்குண்டு, சதுரங்கப்பாறை உள்ளிட்ட இடங்களில் 3 காட்டுயானைகள் கடந்த 20 நாட்களாக நிரந்தரமாக தங்கி உள்ளன. சபரிமலை சீசன் என்பதால் கேரளா காடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள இந்த யானைகளால் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத நிலை உண்டாகி உள்ளது. தோட்டங்களில் 5வருடம், 8 வருடம் என கஷ்டப்பட்டு வளர்த்த தென்னைமரங்களை பிடுங்கி எறிவதும், இதில் உள்ள குருத்துக்களை உணவாக தின்பதும் அதிகரித்து வருகிறது.

தேவாரம் ரவி என்பவரது தோட்டத்தில் புகுந்த 3 யானைகளும் 30 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்ததுடன், சொட்டுநீர் பாசனக்குழாய்கள், மின் வயர்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. இதேபோல் முள்வேலிகள் போடப்பட்டு இருந்தாலும், இதனை ஆக்ரோஷமாக பிடுங்கி வீசி சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் உத்தமபாளையம் வனத்துறையினரிடம் இழப்பீடு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம் காட்டுயானைகள் அதிகம் நிறைந்த ஆபத்தான வனப்பகுதிகளை கொண்டுள்ளது. ஒற்றை மக்னாவால் 12 பேர் உயிரிழந்தும், இதுவரை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

ஆனா இந்த காட்டு யானைகளை மக்னா யானையால் விரட்டிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அழைத்து சென்றுவிட்டனர். எனவே, விவசாயிகளை ஏமாற்றாமல் காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுத்திட நிரந்தர நடவடிக்யை மாவட்ட வன அதிகாரிகள் எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : foothills , Thevaram Mountain Range, Coconut Tree, Destruction, Wildflowers
× RELATED அறந்தாங்கி அருகே வைரிவயலில் குதிரை, மாட்டுவண்டி எல்கைப்பந்தயம்