×

களியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்த எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: களியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்த எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். வில்சன் மனைவி ஏஞ்சல் மேரியிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை, இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப,  கருணை அடிப்படையிலான அரசு பணி வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பினமாக அன்னாரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்கவும் அவர் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் அதற்கான காசோலையை வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி மற்றும் 2 மகள்களிடம்  தலைமைச்செயலகத்தில் முதல்வர் வழங்கினார்.


Tags : Wilson ,checkpoint ,SI ,Palanisamy ,Kaliyakavili ,Kalyanakavili ,shooting , Kaliyawila, Checkpoint, Gun, Chief, Edappadi Palanisamy, Wilson, Angel Mary, Check
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...