×

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை காணொளி மூலம் தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் அம்மா விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம், அமைச்சர்கள், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிளாய் ஊராட்சி மைதானத்தில் இளைஞர் விளையாட்டுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்த 4 நாளில் இளைஞர் விளையாட்டுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிபத்தத்தக்கது.

கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் 2019-20 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64 கோடியே 35 லட்சம் மதிப்பில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இத்திட்டத்தின்படி, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழுக்கள் அமைத்தல், அக்குழு உறுப்பினர்களுக்கு வாலிபால், கபடி, கிரிக்கெட், பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்தல், திறந்த வெளி உடற்பயிற்சி மையங்கள் அமைத்தல், போட்டிகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் இந்த திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொளிக்காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.

வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலை

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியைமுதல்வர் பழனிசாமி வழங்கினார். வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ.1 கோடி நிதியை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.  மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பினர்.


Tags : Palanisamy: Ministers ,Amma ,Ministers ,Mummy Youth Sports Program , Amma Youth Sports Program, Video, CM Palanisamy, Ministers
× RELATED திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்