×

2022ம் ஆண்டுக்குள் முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டம்!!

டெல்லி : டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை அருகே பிரதமருக்கான புதிய இல்லம் அமைக்கவும் அரசு அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வாடகை செலவீனமாக வருடம் தோறும் சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு செலவிடப்படுகிறது. எனவே சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் பொதுவான மத்திய தலைமைச் செயலகத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி குடியரசுத் துணை தலைவர் இல்லம் மற்றும் மத்திய அரசசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவன், நிர்வான் பவன், கிருஷி பவன், விஞ்ஞான் பவன் உள்ளிட்ட கட்டிடங்கள் காலி செய்யப்பட உள்ளன. அனைத்து அமைச்சகங்களுக்கும் பொதுவான ஒரு கட்டிட வளாகத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டிடம் காட்டப்படுகிறது.

தற்போதைய நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே புதிய நாடாளுமன்றம் அமையும். 1000 முதல் 1200 பேர் வரை அமரும் வசதியுடன் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம் 2022ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும். மேலும் குடியரசுத் தலைவர் மளிகை அருகிலேயே குடியரசுத் துணை தலைவர், பிரதமர் ஆகியோரின் இல்லத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான  ராஜபாதை முற்றிலும் நவீன மயமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.


Tags : parliament building , President of the Republic, Central Government, Delhi, Parliament, Building
× RELATED டெல்லியில் உள்ள நாடாளுமன்ற...