×

ஓடும் ரயில்களில் பயணிகளிடம் கொள்ளை: டெல்லி, ஹரியானாவைச் சேர்ந்த 5 பேர் கைது

சென்னை: ஓடும் ரயிலில் பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 5 பேரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 90 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள், அதேபோல புறநகர் ரயில்களில் தொடர்ந்து பயணிகளிடம் இருந்து நகை, பணம் திருட்டு போவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கடந்த 6-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் டெல்லி, ஹரியானாவை சேர்ந்த ராஜேந்திரகுமார், மதன்லால், ராம்தியா, சுனில்குமார், சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் ஓடும் ரயிலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் அவர்கள் வைத்திருந்த 25 சவரன் தங்க கட்டியை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரும் தற்போது காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 65 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Haryana ,Delhi ,persons ,passenger ,passengers , Delhi, Haryana, 5 people arrested
× RELATED ஹரியானாவில் இருந்து பாஜக கொடி, தாமரை...