×

மயிலாடுதுறை நகரில் தொடர்ந்து திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் வேதனை: நகரின்வெளிப்பகுதியில் அமைக்க கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஸ்டேட் வங்கி சாலையில் நேற்றமுன்தினம் புதிதாக திறக்கப்பட்டது. நகர்பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் அச்சமும் வேதனையுமடைந்த பொதுமக்கள் நகரின் வெளிப்பகுதிகளுக்கு மதுக்கடைகளை மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் ஸ்டேட்வங்கி சாலையில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை, கூறைநாடு பேருந்து நிறுத்தத்தில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை, புதிய பேருந்து நிறுத்தத்தில் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை, மயிலாடுதுறை மகாதனத்தெருவில் பாருடன்கூடிய டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஸ்டேட் வங்கி சாலையில் அனுமதியில்லா பாருடன் அதிகாரிகளின் துணையுடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது.

அதற்கு பதிலாகஸ்டேட்வங்கி சாலையிலிருந்து ஜுவல்லரி கடைகளுக்குச் செல்லும் தென்புறத்திலும் பழையபேருந்து நிறுத்தத்திற்கு கிழக்குபுறம் வழியாகச் செல்லும் வகையில் புதிதாக டாஸ்மாக் கடை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. கடையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலிருந்து குடிமகன்கள் வந்து குவிந்தனர். இதனால் வடபுறத்தில் கடை நடத்துபவர்கள் மற்றும் அந்த வழியை உபயோகப்படுத்துவோர் அதிர்ச்சிக்குள்ளாகினர், தரைக்கடை மற்றும் ஸ்டேட்வங்கி சாலையில் கடை நடத்திவருபவர்கள் இந்தக்கடையை உடனடியாக அகற்றவேண்டும் கோரிக்கை எழுந்தநிலையில் டாஸ்மாக் கடையின் வடபுறம் வழியாக குடிமகன்கள் செல்லக்கூகூடாது என்று அந்தப்பகுதியில் உள்ள தடுப்பில் கதவை மாட்டி அப்பகுதி மக்கள் தடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கடைககள் நகரில் ஒழிந்தது என்று நிம்மதிபெருமூச்சு விட்ட மயிலாடுதுறை நகர பொதுமக்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடையாக திறக்கப்படுவது வேதனையளிக்கிறது. நகருக்கு வெளியில் டாஸ்மாக் கடைகளை கொண்டு செல்லவேண்டும். போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பேருந்து நிலையம் மற்றும் ஆன்மீகத்திற்கு அடையாளமாகத் திகழும் மகாதானத்தெரு, மற்றும் கூறைநாடு பேருந்துநிறுத்தம் போன்ற இடங்களில் உள்ள கடைகளை உடனடியாக அகற்றி நகருக்கு வெளிப்பகுதியில் அமைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மேலும் நகரின் மையப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறப்பது சமூக ஆர்வலர்களையும், பொதுமக்களையும் போராட்டத்திற்குத்தள்ளும் நடவடிக்கையாக மாறிவருகிறது.

Tags : opening ,Mayiladuthurai ,liquor stores ,liquor shops , Mayiladuthurai, Liquor Store
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...