×

சீர்காழி அருகே மங்கைமடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் இயற்கை ரக நெல் சாகுபடி

சீர்காழி: சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தனக்கு சொந்தமான வயலில் கருப்புகவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா போன்ற இயற்கை ரக நெல் சாகுபடி செய்துள்ளார். உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் இந்த ரக அரிசியை அனைவரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சீர்காழி அருகே திருவெண்காட்டில் வசிப்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜகோபால் இவர் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மங்கைமடத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் பழமையான இயற்கை ரக நெல் வகையான உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய கருப்புகவுனி நெல் சாகுபடி செய்துள்ளார்.

இதேபோல் இயற்கை ரகமான உடலுக்கு வலிமை தரக்கூடிய சன்ன ரகமான ஆத்தூர் கிச்சடி சம்பா ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிர்கள் 5 அடிக்கு மேல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இந்த நெற்பயிர் மற்ற நெற்பயிர்களை விட 35 நாட்கள் அதிகமாக எடுத்துக்கொண்டு நடவு செய்த 135 நாட்களில் அறுவடைக்கு தயாராகின்றன. கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா உடல்நலத்திற்கு நல்லது என்பதால் இதனை அனைவரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Tags : Sirkazhi ,Mangimadam , Rice, Immunity, Natural Rice Cultivation
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்