×

அமெரிக்க வீரர்களை குறிவைத்து ஈராக் விமானப்படை தளம் மீது ராக்கெட் தாக்குதல்

சமர்ரா: அமெரிக்க படையினர் தங்கியிருந்த ஈராக் விமானப்படை தளம் மீது ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈராக் வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். அமெரிக்க படையின் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி பலியானதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால் இதில் அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை. தாக்குதலுக்கு முன்கூட்டியே அமெரிக்க வீரர்கள் அங்கிருந்து அப்புறப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அல்பலாத்தில் உள்ள ஈராக்கின் விமானப்படைதளத்தின் மீது நேற்று 4 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இங்கு அமெரிக்க படையினரும் தங்கியிருந்தனர். அவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 4 ஈராக் வீரர்கள் காயமடைந்தனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கிருந்து 90 சதவீத அமெரிக்க படையினர் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Tags : Rocket attack ,Iraqi Air Force ,soldiers ,US , US soldier, target, Iraqi Air Force, base, Rocket, attack
× RELATED ஈராக்கில் ராக்கெட் தாக்குதல் 4 வீரர்கள் பலி