×

உலக கோப்பை டி20: இந்திய அணியில் 15 வயது ஷபாலி தேர்வு

மும்பை: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மான்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் மொத்தம் 15 வீராங்கனைகள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக செயல்படுவார். அரியானாவை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஷபாலி வர்மா, புதுமுக வீராங்கனை ரிச்சா கோஷ் (பெங்கால்) இடம் பிடித்துள்ளனர். இந்தியா: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரித் மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், டானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெயிக்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ராகர், அருந்ததி ரெட்டி.


Tags : World Cup ,team ,Shabali ,Indian , Ulaka kōppai ṭi20, intiya aṇi, 15 vayatu, ṣapāli,tērvu
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...