×

பிக் பாஷ் டி20ல் ஸ்டாய்னிஸ் சாதனை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 44 ரன் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தியது. மெல்போர்னில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் முதலில் பந்துவீசியது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் - ஹில்டன் கார்ட்ரைட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 19 ஓவரில் 207 ரன் சேர்த்து அசத்தியது. கார்ட்ரைட் 59 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேறினார்.

ஸ்டாய்னிஸ் 147 ரன் (79 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிக் பாஷ் தொடரில் டார்சி ஷார்ட் 122 ரன் விளாசி படைத்த சாதனையை ஸ்டாய்னிஸ் முறியடித்து முதலிடம் பிடித்தார். லூக் ரைட் - ராப் குயினி ஜோடி 172 ரன் சேர்த்த சாதனையையும் ஸ்டாய்னிஸ் - ஹில்டன் ஜோடி தகர்த்தது. அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்து தோற்றது.


Tags : Big Bash, T20, Stainis, Adventure
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட்; பெங்களூரு – கொல்கத்தா இன்று மோதல்