×

கலாச்சாரம் சொல்கிறது பசுவை தொட்டால் தோஷங்கள் விலகும்: மகாராஷ்டிரா அமைச்சர் சர்ச்சை கருத்து

மும்பை: மகாராஷ்டிரா அமைச்சர் யஷோமதி தாக்கூர், பசுவை தொட்டால் தோஷங்கள் விலகும் என்று மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். மகாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் யஷோமதி தாக்கூர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அமராவதி மாவட்டம் தியோசா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

நேற்று அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘பசுவை தொட்டால் தோஷங்கள் விலகிவிடும் என்று நமது கலாச்சாரம் சொல்கிறது’’ என்று யஷோமதி தாக்கூர் கூறினார். அவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஜில்லா பரிஷத் தேர்தல் பிரசாரத்தின் போது பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எங்கள் பாக்கெட் இன்னும் நிரம்பவில்லை” என்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Tags : minister controversy ,Maharashtra ,Culture , Culture, touching cow, doshas will quit, Maharashtra, Minister, Opinion
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...