×

புனிதத்தை பரப்பும் இடத்தில் அநாகரீகம் தேவஸ்தான டிவி பெண் ஊழியரிடம் காதல் சொட்ட, சொட்ட பேசிய நடிகர்: எதிர்ப்பை அடுத்து திருப்பதி பக்தி தொலைக்காட்சி தலைவர் பதவி ராஜினாமா

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம், காதல் உரையாடலில் ஈடுபட்ட தொலைக்காட்சி தலைவர் பிரித்திவிராஜ், முதல்வர் உத்தரவுப்படி பதவியை ராஜினாமா செய்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் வைபவம் மற்றும் உற்சவங்கள் இந்து தர்ம பிரசாரத்திற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் தலைவர் ஆளும் கட்சி சார்பில் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஜெகன்மோகன் அரசு பதவியேற்ற பிறகு தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர் பிரித்திவிராஜ், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் தனக்கு வேண்டியவர்கள் 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, 30 பேரை கடந்த டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்  ஒருவருடன் பிரித்திவிராஜ் பணியில் இருந்தபோது பேசிய ஆடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில், பெண் ஊழியரிடம் ‘‘நீ என் இதயத்தில் இருக்கிறாய், ஐ லவ் யூ’’ என்றும், ‘‘மது அருந்துவதை நிறுத்தி இருப்பதாகவும், மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் அது உன்னுடன் இருக்கும்போது தான்’’ என்று பேசியதோடு, ‘‘தொலைக்காட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது உன்னை கட்டிப்பிடிக்க நினைத்ததாகவும், ஆனால் நீ சத்தம் போடுவாய் என்ற அச்சத்தில் செய்யவில்லை’’ என்றும் காமெடி நடிகரும், தொலைக்கட்சியின் தலைவருமான பிரித்திவிராஜ் பேசியுள்ளார்.

இந்த ஆடியோ 5 நிமிடம் ஓடுகிறது. பெண் ஊழியருடன் பிரித்திவிராஜ் காதல் ஆடியோ வெளியாகிய நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் பிரித்திவிராஜை உடனடியாக தொலைக்காட்சியில் தலைவராக தொடர்ந்து இருக்கக்கூடாது. உடனடியாக அரசு பிரித்திவிராஜை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் போது தேவஸ்தான தொலைக்காட்சியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அன்னமய்யா, கண்டசாலா போன்றவர்களை போன்று மேக்கப் செய்து கொண்டு பெருமாள் முன்பு பாடல் பாடுவது போன்று நடித்து தேவஸ்தான டிவியில் ஒளிபரப்பு செய்தார். இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், பிருத்திவிராஜ் விவகாரம் பெரிதானதால், முதல்வர் ஜெகன் மோகன் அவரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இதை யடுத்து நேற்று மாலை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* பெண்கள் கூட்டமைப்பினர் தர்ணா
திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியின் தலைவராக  நடிகர் பிருத்திவிராஜ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட செயலாளர் சாய்லட்சுமி தலைமையில் திருப்பதி கொரல குண்டா ஜங்சன் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Tags : Actor ,area ,TV employee , Sacred, Porn, Devastana TV, Female Servant, Romance, Actress
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி