×

200 முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பொங்கல் கூப்பன்

வேலூர்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளைமறுதினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக முகாம்களில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு இலவச புத்தாடைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 200 முகாம்களில் இலங்கை அகதிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பொங்கல் பரிசு கூப்பன் வழங்கும் பணி நடந்து வருகிறது. இந்த கூப்பன் மூலம் ஆண்களுக்கு 118 மதிப்புள்ள வேட்டி அல்லது லுங்கி, ஆண் குழந்தைகளுக்கு 103 மதிப்புள்ள 2 அரைக்கால் சட்டைகள், பெரியவர்களுக்கு 48 மதிப்புள்ள 2 பனியன்கள், சிறுவர்களுக்கு 18 மதிப்புள்ள 2 பனியன்கள், பெண்களுக்கு 162 மதிப்புள்ள மேல் சட்டை, 46 மதிப்புள்ள 2 டவல்கள், ₹102 மதிப்புள்ள பெட்டிக்கோட், 36 மதிப்புள்ள பாய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த கூப்பன்களை பெற்றுக்கொண்டு கோ ஆப் டெக்ஸ்களில் சென்று புத்தாடைகள் எடுத்துக்கொள்ளலாம் என்று இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 முகாம்களில் 1100 குடும்பங்களை சேர்ந்த 3500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச புத்தாடைகள் வழங்க பொங்கல் பரிசு கூப்பன் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Sri Lankan ,refugees ,camps , Pongal Coupon , 200 , Sri Lankan refugees
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!