×

பெசன்ட்நகரில் மறு பயன்பாட்டு பொருட்களின் சந்தை சைக்கிள் ரூ.50, சோபா செட் ரூ.100, பிரிட்ஜ் ரூ.200க்கு விற்பனை: இன்று காலை 10 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மறுபயன்பாடு பொருட்கள், மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில், மாற்றுக்கடை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஷ் அறிவுறுத்தலின்படி அடையாறு மண்டலத்தில் உள்ள பெசன்ட் நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் சமுதாய நலக்கூடத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சந்தை பெற்றது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பொருட்களான புத்தகங்கள், சலவை செய்யப்பட்ட ஆடைகள், வீட்டு உபகரணங்கள், மின்னணு பொருட்கள், மரச்சாமான்கள், பொம்மைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், குடை, மழைகோட், சைக்கிள், செயற்கை ஆபரண நகைகள், சூட்கேஸ், பைகள் மற்றும் பயன்படுத்தும் நிலையில் உள்ள காலணிகளை இம்மையத்தில் விற்பனைக்கு வைத்தனர்.

இதன்படி ஆயிரக்கணக்கான துணிகள், புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனைக்கு வைக்ககப்பட்டன. இவற்றின் விவை ரூ.10 முதல் ரூ.200 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணி வரை நடைபெற்ற விற்பனையில் 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டன. இதில் குறிப்பாக பிரிட்ஜ் ஒன்று ரூ.200க்கும், சோபா செட் ஒன்று ரூ.100க்கும், சிறுவர்களுக்கான சைக்கிள் ஒன்று ரூ.50 விற்பனை செய்யப்பட்டது.  இந்த சந்தை இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பொருட்களை நன்கொடையாகவும் வழங்கலாம். ஆனால் இதை தங்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் வாய்ப்பாக கருதாமல், பயன்படுத்தும் நிலையில் உள்ள பொருட்கள் பிறருக்கு பயன்படும் நோக்கிலேயே பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Besantnagar ,event ,Bridge , Besantnagar, goods, market bicycle, Rs.50, sofa set, Rs.100, bridge, Rs.200, sale, this morning, 10 am-6pm
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!