×

மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடத்தை நிரப்பாவிட்டால் போராட்டம்: தொமுச நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: சென்னை, எழும்பூரில் தமிழ்நாடு மின் கழக தொமுச நிர்வாகக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கூட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை தேடிதந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிேறாம். மின்வாரியத்தில் 50000 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. அதை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் போராட்டம் நடத்தப்படும்.

1.12.2019 முதல் வழங்கிட வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை உடனடியாக துவங்க வேண்டும். ஊதிய உயர்வு 25 சதவீதம் வழங்கிட வேண்டும். 22.2.2018 ஊதிய உயர்வின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்திட வேண்டும். அதுவரை அவர்களுக்கு ரூ.500  தினகூலி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். களபிரிவு ஊழியர்கள் இருவழி பாதை பதவி உயர்வு சம்பந்தமாக உடனடியாக பேசி தீர்வுகாண வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய சங்க நிர்வாகிகள் கொண்ட முக்கிய முடிவுகள் எடுத்திட பொதுச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட செயல்திட்ட குழு அமைக்கபட்டது.



Tags : Power Board, Workplace, Total, Executive Committee Meeting
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...