×

வியாபாரிகள் சங்க 45வது ஆண்டு விழா மாணவர்களுக்கு ஊக்க தொகை: விக்கிரமராஜா பங்கேற்பு

சென்னை: திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கம் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது. திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க 45வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அவைத்தலைவர் கே.எஸ்.தங்கவேல் தலைமை வகித்தார். சங்க தலைவர் வி.பி.மணி வரவேற்றார். பொது செயலாளர் பால் பாண்டியன், பொருளாளர் எம்.காசிப்பாண்டியன், அறக்கட்டளை தலைவர் குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கி.ஆ.பெ.விசுவநாதம் மகள் டாக்டர் மணிமேகலை கண்ணன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். போலீஸ் கூடுதல் டிஜிபி ரவி, 10, 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். பின்னர், காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சங்க தலைவர்கள் பெயரால் விருதுகளை காணிக்கை அன்னை ஆலயம் பங்கு பணியாளர் எம்.வி.ஜேக்கப் வழங்கினார். விழாவில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Merchants Association, 45th Anniversary, Student, Incentive, Wickramarajah
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை