×

‘ஐ லவ் யூ,, நீ இதயத்தில் இருக்கிறாய்’ டிவி பெண் ஊழியரிடம் நடிகர் காதல் உரையாடல்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் வைபவம் மற்றும் உற்சவங்கள் இந்து தர்ம பிரசாரத்திற்காக கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 7ம்தேதி  வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் தலைவர் ஆளும் கட்சி சார்பில் நியமிக்கப்படுவது வழக்கம்.அதன்படி ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்ற பிறகு தெலுங்கு திரைப்பட காமெடி நடிகர் பிரித்திவிராஜ், வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  அதன்பிறகு அவர் தனக்கு வேண்டியவர்கள் 36 பேரை பணியில் அமர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, 30 பேரை  கடந்த டிசம்பர் மாதம் பணி நீக்கம் செய்தார். பணி நீக்கம் செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்  ஒருவருடன் பிரித்திவிராஜ் பணியில் இருந்தபோது பேசிய ஆடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த  ஆடியோவில், பெண் ஊழியரிடம் நீ என் இதயத்தில் இருப்பதாகவும், ஐ லவ் யூ என்றும் மது அருந்துவதை நிறுத்தி இருப்பதாகவும், மது அருந்த வேண்டும் என்று நினைத்தால் அது உன்னுடன் இருக்கும்போதுதான் என்று பேசியதோடு, தொலைக்காட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது உன்னை கட்டிப்பிடிக்க நினைத்ததாகவும், ஆனால் நீ சத்தம் போடுவாய் என்ற அச்சத்தில் செய்யவில்லை என்று காமெடி நடிகரும் தொலைக்கட்சியின் தலைவருமான பிரித்திவிராஜ் பேசியுள்ளார். இந்த வீடியோ 5நிமிடம் ஓடுகிறது.  பெண் ஊழியருடன் பிரித்திவிராஜ் காதல் ஆடியோ வெளியாகிய நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Tags : Actor ,Heart of the Digital TV , I love you, , heart ,digital TV, female ,,conversation
× RELATED நடிகர் மற்றும் டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்