×

Chennai Book Fair விவகாரம்: பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது...மு.க.ஸ்டாலின் டுவிட்

சென்னை: சென்னை பூந்தமல்லி நல்லியம் நரசிம்மன் நகரை சேர்ந்தவர் அன்பழகன் (52). இவர், உள்ளாட்சி அலசல் பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் 43வது தென்னிந்திய புத்தக கண்காட்சியில் 101வது அரங்கில் கடந்த 11ம் தேதி  முதல் தனது உள்ளாட்சி அலசல் என்கிற பெயரில் பத்திரிக்கைகளை விற்பனை செய்து வந்தார். அந்த அரங்கில் ஊழல் புத்தகம் என்கிற பெயரில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு, காய்ச்சலில் மாதம் தோறும் ரூ.100 கோடி டீல் ஊழல், தமிழக  அரசு முட்டை ஊழல், இலவச மின்சாரம் கோடிக்கணக்கில் ஊழல் என்ற தலைப்புகளில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அடுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளரும், பதிப்பக புத்தக செயலாளர் எஸ்.எம். முருகன் (50) என்பவர் அன்பழகனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது அரசுக்கு எதிராக புத்தகம் விற்பனை செய்வதற்காக மட்டும் இந்த  கண்காட்சி நடத்தப்படவில்லை. அனைவருக்கும் பொதுவானது என்று அன்பழகனிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு அன்பழகன், அரங்கத்துக்கு கட்டணம் கொடுத்துவிட்டேன். நான் எந்த புத்தகம் வேண்டுமானாலும் விற்பனை செய்வேன்.  உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள். என்னை தடுத்தால் நான் என்ன செய்வேன் என்று தெரியாது என முருகனுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தனக்கு மிரட்டல் விடுத்தாக கூறி பதிப்பாளர் முருகன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி சம்பவ இடத்திற்கு 101வது அரங்கில் அரசுக்கு எதிராக புத்தகங்கள் அச்சிட்டு விற்பனை  செய்யப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து புத்தகங்களை பறிமுதல் செய்ய முயன்ற போது அன்பழகன் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், போலீசார் புத்தகங்களை அரங்கத்தில் இருந்து எடுத்து சென்றனர்.

தொடர்ந்து அவர் மீது ஐபிசி 341, 294பி, 506/II ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இன்று காலை அன்பழகனை அவரது இல்லத்தில் அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் குமரன்  நகர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, அன்பழகன் கோவை மாநகராட்சி, தாம்பரம் நகராட்சி பொறியாளர்களை பணம் கேட்டி மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், Chennai Book Fair-ல், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் மக்கள் செய்தி மையம் அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது  கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Chennai Book Fair Affair ,journalist ,arrest , Chennai Book Fair affair: The arrest of journalist and loved one is condemned ...
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...