மேற்கு வங்கத்தில் உள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவச்சிலையை தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

கொல்கத்தா: பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு நேற்று மாலை சென்றார். கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி ராஜ்பவனில் தங்கியுள்ளார். இதற்கிடையே, ராஜ்பவனில் தங்கிய பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் சென்றார். கொல்கத்தா துறைமுக கழகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா, நேதாஜி உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

இதில் பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் உள்ள பேளூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவச்சிலையை பிரதமர் மோடி வணங்கி வழிபட்டார். அதன்பின்னர், மடத்தில் நடைபெற்ற பஜனையிலும் கலந்து கொண்டார். அங்கிருந்த் சாதுக்களுடன் கலந்துரையாடினார்.

Tags : Modi ,West Bengal ,Swami Ramakrishna Paramahamsar ,Swami Ramakrishna , Swami Ramakrishna, West Bengal,modi
× RELATED இதுவரை இல்லாத அளவுக்கு கடும் உயர்வு தங்கம் கிராம் ரூ.4000 தாண்டியது