×

திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் 6 தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியது

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 ஒன்றியங்களுக்கு உட்பட்டு 230 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும், கூட்ட அரங்கில் நடந்தது. இதில், போதிய கோரம் இல்லாததால் திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மற்ற 10 ஒன்றியங்களில் மட்டும் மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில், திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவராக ஜெயசீலி ஜெயபாலன் (திமுக), துணைத்தலைவராக பர்க்துல்லா (திமுக), பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவராக எம்.ஜெயக்குமார் (திமுக), துணைத்தலைவராக பரமேஸ்வரி கந்தன் (திமுக), சோழவரம் ஒன்றிய குழு தலைவராக எம்.ராஜாத்தி (திமுக), துணைத் தலைவராக வெ.கருணாகரன் (திமுக), புழல் ஒன்றிய குழு தலைவராக கே.தங்கமணி (திமுக), துணைத்தலைவராக பா.சாந்திபாஸ்கர் (திமுக), மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவராக கே.ரவி (திமுக), துணைத்தலைவராக பா.தமிழ்ச்செல்வி (திமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

வில்லிவாக்கம் ஒன்றிய குழுதலைவராக கிரிஜா (திமுக),ஒன்றிய குழுதுணைதலைவராக ஞானபிரகாசம் (பாமக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவராக கி.ரமேஷ் (அதிமுக), துணைத்தலைவராக க.சுரேஷ் (அதிமுக), கடம்பத்தூர் ஒன்றிய குழு தலைவராக சுஜாதா சுதாகர் (அதிமுக), துணைத்தலைவராக ஆர்.சரஸ்வதி ரமேஷ் (திமுக), கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவராக கே.சிவக்குமார் (அதிமுக), துணைத்தலைவராக கு.மாலதி (திமுக), பூண்டி ஒன்றிய குழு தலைவராக பி.வெங்கடரமணா (அதிமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  

இவ்வாறு 10 ஒன்றியங்களில் 6ல் திமுக ஒன்றிய குழு தலைவர் பதவிகளை கைப்பற்றி உள்ளது. கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி ஒன்றியங்களில் அதிமுக தலைவர் பதவியை கைப்பற்றினாலும், துணைத்தலைவர் பதவியை திமுக கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : DMK ,district ,unions ,Thiruvallur ,districts , Thiruvallur, DMK
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...