×

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் 2018-19ல் பாஜ வருமானம் ரூ2,410 கோடி முந்தைய ஆண்டை விட 134% ‘ஜிவ்’

புதுடெல்லி: கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாஜ.வின் மொத்த வருமானம் ரூ.2,410 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 134 சதவீதம் அதிகமாகும். கடந்த 2018-19ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த வரவு-செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி சென்ற நிதியாண்டில் பாஜ.வின் வருமானம் ரூ.2,410 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் பாஜ.வின் வருமானம் சுமார் ரூ.1,027 கோடியாக இருந்தது. இந்நிலையில், இது 134 சதவீதம் உயர்ந்துள்ளது.

சென்ற நிதியாண்டில் பாஜ.வின் மொத்த வருவாயில் ரூ.1,450 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் இது ரூ.210 கோடியாக இருந்தது. சென்ற நிதியாண்டில் பாஜ ரூ.1,005 கோடி செலவிட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் பாஜ ரூ.758 கோடி செலவிட்ட நிலையில் அது 32 சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி சென்ற 2018-19ம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.918 கோடி என கூறியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட நான்கரை மடங்கு அதிகமாகும். மொத்த வருமானத்தில் இக்கட்சி ரூ.383 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டில் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.5 கோடி மட்டுமே பெற்றிருந்த நிலையில், இது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில் காங்கிரஸ் ரூ.470 கோடி செலவிட்டுள்ளதாக கூறியுள்ளது.பாஜ.வுக்கு பெரும்பாலும் தன்னார்வ பங்களிப்புகள் அடிப்படையில், அஜிவான் சஹயோக் நிதியில் இருந்து வந்துள்ளன. மேலும், பாஜ சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவில் நிதி குவிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags : Baja , Election Fund Bonds, Baja Income
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...