மஞ்சள் விலை சரிவு

சேலம்:  பொங்கலுக்கு பிறகு புது மஞ்சள் அறுவடை தொடங்குகிறது. கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு குவிண்டாலுக்கு ரூ3 ஆயிரம் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் மஞ்சள் ஏலம் போகவில்லை. வழக்கமாக சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு 70 முதல் 80 டன் மஞ்சள் விற்பனைக்கு வரும். ஆனால், 20 டன் மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் குவிண்டால் ரூ9,000 முதல் ரூ10,000 வரை ஏலம் போனது. ஆனால், நடப்பாண்டு குவிண்டால் ரூ6,500 முதல் ரூ7,000 தான் ஏலம் போனது. கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு குவிண்டாலுக்கு ரூ3 ஆயிரம் சரிந்துள்ளது.

Tags : Yellow, price decline
× RELATED புடலங்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை