×

ஆன்லைன் தள்ளுபடிக்கு எதிர்ப்பு: பிராண்ட் மொபைல்களை இனி விற்க மாட்டோம்: சில்லரை வியாபாரிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: ஆன்லைனில் விற்கப்படும் போன்களுக்கு தள்ளுபடி வழங்குவதை கட்டுப்படுத்தாவிட்டால், பிராண்ட் மொபைல் போன்களை விற்க மாட்டோம் என சில்லறை விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சில்லறை வர்த்தகம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துவிட்டது. ஆன்லைன் வர்த்தகம் தலைதூக்கியதே காரணம் என்று சில்லரை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அகில இந்திய மொபைல் மொபைல் போன்கள் சில்லறை விற்பனையாளர் சங்கம் (ஏஐஎம்ஆர்ஏ) பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் விற்பனையில் அதிகம் தள்ளுபடி தரப்படுகிறது. இதனால் மக்கள் ஆன்லைனில் போன்களை வாங்குவதையே விரும்புகின்றனர். இதே நிலை நீடித்தால் சில்லறை விற்பனையாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். ஏற்கனவே பொருளாதார மந்த நிலை காரணமாக ஏராளமானோர் வர்த்தகம் இல்லாததால் கடைகளை மூடிவிட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் விற்பனையில் அளிக்கப்படும் தள்ளுபடி அளவுக்கு தாங்களும் விலைக் குறைத்து விற்பனை செய்வோம். இல்லையேல், வேறு வழியில்லாமல்  சொல்போன் விற்பனையையே புறக்கணித்துவிடுவோம். இவ்வாறு சில்லரை வியாபாரிகள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சர் கண்டிப்பு
ஆன்லைன் விற்பனைக்கு எதிராக  சில்லறை விற்பனையாளர்கள சங்கம், அகில இந்திய வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளன.  சில்லரை வியாபாரிகளுக்கு ஆதரவாக அரசு நடவடிக்கை எடுக்க உறுதி கூறியுள்ளது. அமைச்சர் பியுஷ் கோயல் கூறுகையில், ‘எந்த காரணத்தை ெகாண்டும் சில்லரை வியாபாரத்தை ஒடுக்க ஆன்லைன் வர்த்தகம் செயல்படக்கூடாது’ என்று எச்சரித்தார்.

Tags : Retailers , Online Discount, Brand Mobile, Retailers
× RELATED பந்தலூர் பகுதியில் திடீர் மின் துண்டிப்பால் பாதிப்பு