×

நாசா விண்வெளி வீரர்கள் குழுவில் இந்திய அமெரிக்கர்: நிலவு, செவ்வாய் கிரகம் செல்ல வாய்ப்பு

ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, புதிய விண்வெளி வீரர்களை தேர்வு செய்வதற்கு கடந்த 2017ம் ஆண்டு அழைப்பு விடுத்தது. இதற்கு 18 ஆயிரம் பேர் மனு செய்திருந்தனர். இவர்களில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டு பயிற்சியை முடித்து விண்வெளி வீரர்களாக தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் விண்வெளி நடைபயிற்சி, ரோபோடிக்ஸ், சர்வதேச விண்வெளி மையத்தின் அமைப்புகள், ரஷ்ய மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜா ஜான் உர்புதூர் சாரி(41). அமெரிக்க விமானப்படையில் கர்னலாக பணியாற்றினார். தற்போது, நாசா விண்வெளி வீரராகி உள்ளார்.

சர்வதேச விண்வெளி மையம், நிலவு, செவ்வாய் கிரகத்துக்கு எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த குழுவில் ராஜா சாரியும் அங்கம் வகிப்பார். ‘‘2020ம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மீண்டும் அமெரிக்க ராக்கெட்டில், அமெரிக்க மண்ணில் இருந்து விண்ணுக்கு செல்வார்கள்’’ என நாசா நிர்வாகி ஜிம் பிரைட்ஸ்டைன் கூறியுள்ளார்.


Tags : astronaut team ,NASA ,Moon ,Mars , NASA astronaut, Indian American
× RELATED கண்ணகி கோயில் சித்திரை முழுநிலவு விழா அறக்கட்டளையினர் ஆலோசனை