×

பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை

பக்கிங்காம் கால்வாய் ஓரம் அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை திறந்தவெளி பாதையாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் இந்த வழியாக செல்லும்பொழுது சமூக விரோதிகள் வழிமறித்து வழிப்பறி செய்யும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனால் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த பாதை குறுகி இருப்பதால் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. குப்பை கிடங்கு இருப்பதால்  மாடு, பன்றி, நாய்களும் சாலையில் சுற்றித்திரிவது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

கரிமேடு அருகே உள்ள கால்வாய் மேம்பால கட்டுமானம் மற்றும் இதர பணிகளுக்காக ரூபாய் 58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆனால், 19 மாதங்களில் முடிய வேண்டிய மேம்பாலப் பணி தற்போது வரை நடைபெறுவதால் கட்டுமான பணி திட்டமிட்டு தற்போது 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பணிகளை துரிதமாக செய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கட்டுமான அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாற்றுப்பாதை அமைப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த கால்வாய் மேம்பால கட்டுமான பணி காலதாமதமாக ஆகியுள்ளது. தற்போது பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணியை முழுவதுமாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து விடுவோம் என்றனர்.

Tags : public , Safe
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...