டேபிள் டென்னிஸ்: சித்கரா சாம்பியன்

சென்னை: அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சித்கரா பல்கலைக்கழகம், தெலங்கானாவின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தை 3-2 என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் உஸ்மானியா பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி 3வது இடத்தையும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நார்த் பெங்கால் பல்கலைக்கழகம் 4வது இடத்தையும் பிடித்தன.

Tags : Chitkara , Table tennis
× RELATED மாநில டேபிள் டென்னிஸ் போட்டி: பட்டிவீரன்பட்டி மாணவர்கள் சாதனை