×

ஐவர் கால்பந்து ஸ்டெட்ஸ் அணி சாம்பியன்

சென்னை: வடசென்னையில் வசிக்கும் சிறுவர்களுக்கான யு-15 ஐவர் குழு கால்பந்து போட்டி நடைபெற்றது. குடிசைவாழ் மக்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்டெட்ஸ், க்ரை அமைப்பு இணைந்து இந்த போட்டியை நடத்தின. வியாசர்பாடி எஸ்எம் நகர் கால்பந்து திடலில் நடந்த இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 15வயதுக்கு உட்பட்ட தலா 5 பேர் விளையாடினர். இறுதிப் போட்டியில் கார்த்திக் தலைமையிலான ஸ்டெட்ஸ் அணியும், இர்பான் தலைமையிலான ‘சாதிப்போம்’ அணியும் களம் கண்டன. அதில் ஸ்டெட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஸ்டெட்ஸ் அணியின் கார்த்திக் 2, அபி 1 கோல் போட்டனர். சாதிப்போம் அணி சார்பில் இர்பான் ஒரு கோல் அடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்டெட்ஸ் அணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேலாளர் செந்தில், 2வது இடம் பிடித்த சாதிப்போம் அணிக்கு சுரேஷ் கோப்பைகளை வழங்கினர். முன்னதாக போட்டிகளை நடிகர் டைகர் கார்டன் தங்கதுரை தொடங்கி வைத்தார்.

Tags : Ivor Football Steeds Team , Football
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...