×

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு 3 பேரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: திருவள்ளூர் கோர்ட்டில் போலீஸ் மனு

சென்னை: எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அப்துல் சமீம் உட்பட 3 பேரின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய கோரி,  திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக  இருந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 2014, ஜூன் 18ம் தேதி அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தை  மூடிவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றபோது, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்கு பதிந்து  நாகர்கோவிலை சேர்ந்த சையது அலி நவாஸ் (25), கன்னியாகுமரி அப்துல் சமீம் (25), வால்பாறை காஜா மொய்தீன் (47) உள்ளிட்ட 17 பேரை கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களில், அப்துல் சமீம், சையது அலி நவாஸ், காஜா மொய்தீன் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்தனர். அதற்கு பிறகு  நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.  இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில், 3  நாட்களுக்கு முன் எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், அப்துல் சமீமுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, இந்து  முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட, சையத் அலி நவாஷ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோரின் ஜாமீனை ரத்து  செய்ய கோரி, திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.  இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Tags : SI Wilson ,court ,Thiruvallur ,persons ,Cancellation , SI Wilson, Murder Case, Thiruvallur Court, Police
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’