×

இந்து சமய அறநிலையத்துறையில் 93 செயல் அலுவலர்கள் புதிதாக நியமனம்: கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக 93 செயல் அலுவலர்களை நியமனம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையில் மொத்தம் 628 பணியிடங்கள் உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை தொடர்ந்து, அறநிலையத்துறை சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டுத, அதில் தேர்ச்சியடைந்த 93 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயிற்சி கடந்த 1 மாதமாக நடந்து வந்தது.

தற்போது அந்த செயல் அலுவலர்கள் 93 பேரை பணி நியமனம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி செயல் அலுவலர் திவ்யா வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், செயல் அலுவலர் சத்தியராஜ் சூளை சொக்கவேல் சுப்பிரமணியசாமி கோயில், செயல் அலுவலர் குப்பன் பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோயில், செயல் அலுவலர் தினகரன் அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோயில், செயல் அலுவலர் பிரபு அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், செயல் அலுவலர் பூவழகி காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில், செயல் அலுவலர் சரஸ்வதி மதுராந்தகம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், செயல் அலுவலர் சரவணன் ஆண்டார் குப்பம் பாலசுப்ரமணியசாமி கோயில், செயல் அலுவலர் நல்லதாய் நெல்லை வண்ணாரப்பேட்டை பேராத்து செல்லியம்மன் கோயில் என மொத்தம் 93 பேர் செயல் அலுவலர்களாக நியமனம் செய்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது: பயிற்சியில் உள்ள செயல் அலுவலர்கள் பயிற்சி முடிவுற்றதும் நியமனம் செய்யப்பட்டுள்ள ேகாயிலில் உடனடியாக பணியில் சேர்ந்து கூடுதல் பொறுப்புள்ள செயல் அலுவலரிடம் இருந்து முழுமையாக ஏற்று அவர்களை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். செயல் அலுவலர்கள் கோயிலில் பணியில் சேர்ந்தவுடன் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : office bearers ,Commissioner ,Hindu Religious Trust , Department of Hindu Religious Affairs
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...