×

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16ம் தேதி படகு போட்டி

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்ற வகையில் வருகிற 16ம் தேதி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து படகு குழாம்களில் படகு போட்டிகள் நடத்தப்படும் என்று சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகின்ற தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்ற வகையில் வருகிற 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து படகு குழாம்களில் படகு போட்டிகள் நடத்தப்படஉள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைச்சாலை கோவளம் அருகில் உள்ள படகுகுழாம் முட்டுக்காடு மற்றும் முதலியார்குப்பம் படகுகுழாம் ஆகிய இடங்களில் படகு போட்டிகள் நடைபெற உள்ளது. கிழக்கு கடற்கரைச்சாலையில் மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்கின்ற வழியில் செய்யூர் தாலுகா இடைக்கழிநாடு பேருராட்சியில் அமைந்துள்ள முதலியார்குப்பம் படகுக்குழாமிலும் வருகிற 16ம் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் சுற்றுலாப்பயணிகளுக்கு கயாக் படகு போட்டியும், துடுப்பு படகு போட்டியும் மற்றும் மிதிபடகு போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் சுற்றுலாப்பயணிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படும். இந்த விழாவில் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள். முட்டுக்காடு படகுகுழாம் -9176995826, முதலியார்குப்பம் படகுகுழாம்-9176995827 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Boat competition ,Tamil Nadu , Boat competition
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...