×

அமைச்சர் பேச்சால் மக்கள் அதிர்ச்சி தூங்கிக்கொண்டே மாணவர்கள் படிக்கலாம்

கோபி:  கோபி அருகே உள்ள மொடச்சூரில் பூங்காவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து  சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்காக க்யூ.ஆர்.கோடு முறை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்யூ.ஆர்.கோடை பயன்படுத்தி மாணவர்கள் எங்கிருந்தாலும் ஆடியோ, வீடியோ முறையில் கல்வி கற்க முடியும்.  விளையாடிக்கொண்டும், படுத்து தூங்கிக்கொண்டும் கூட கல்வி கற்க முடியும் என்றார். தூங்கிக்கொண்டே படிக்க முடியும் என்ற அமைச்சர் பேச்சால்  பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.  அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் காலை உணவு வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது.

இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள்தான் காலை உணவு வழங்கி வருகிறது. காலை உணவு வழங்க இதுவரை  அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் காலை உணவு வழங்குவதில் கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால், பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அரசு  பள்ளிகளில் வினாத்தாள் வழங்குவதற்காக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. ஏழை மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த  அரசு பரிசீலிக்கும் என்றார். பொங்கலையொட்டி வருகிற 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டபோது, முதல்வருடன் இது பற்றி பேசி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Tags : minister ,speech , Minister Sengottaiyan, School Education
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...