×

சிவகாசியில் சுவாரஸ்யம் மனைவி ஒன்றிய தலைவர் கணவர் துணைத்தலைவர்

சிவகாசி:  சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் மனைவி தலைவராகவும், கணவர் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 31 வார்டுகள் உள்ளன. இதில், திமுக 17, அதிமுக 9 மற்றும் புதிய தமிழகம், அமமுக, காங்கிரஸ், மதிமுக, சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றனர். ஒன்றியத்தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் சிவகாசி யூனியன் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி தினேஷ்குமார் முன்னிலையில் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு 6வது வார்டு திமுக கவுன்சிலர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், 18வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாராணம்மாள் போட்டியிட்டனர்.

இதில், திமுகவுக்கு ஆதரவாக 21 வாக்குகளும்,  அதிமுகவுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் கிடைத்தன. ஒன்றியத் தலைவராக முத்துலட்சுமி விவேகன்ராஜ் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக  இவரது கணவர் விவேகன்ராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற தம்பதிக்கு, திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Tags : president ,Sivakasi ,union , Sivakasi, wife union president and husband vice president
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து