×

விமான நிலையத்தில் 1.53 கிலோ தங்கம் கடத்திய 3 பேர் கைது

சென்னை: விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 1.53 கிலோ தங்கம் சிக்கியது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரியாத்தில் இருந்து  கல்ப் ஏர்வேஸ் விமானம் நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்த்துக்கு வந்தது. அதில் கேரள மாநிலத்தை சேர்ந்த  அப்துல்ரஹ்மான் (40). என்பவரது உடமைகளை சோதனை நடத்தினர். அப்துல்ரஹ்மான், ரியாத்தில் இருந்து 2 புதிய எமர்ஜென்ஸி லைட்டுகள் வாங்கி  வந்திருந்தார். அதை சுங்கஅதிகாரிகள் திறந்து பார்த்தபோது பேட்டரி இருக்கும் இடத்தில் 8 தங்க தகடுகள் இருந்தன. அதன் மொத்த எடை 594 கிராம்.  அதன் சர்வதேச மதிப்பு 24.3 லட்சம்.

இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இண்டியா விமானத்தில் சென்னையை சேர்ந்த யாசின் (46), முகமது பனீஸ் (35)  ஆகிய இருவரும் சுற்றுலா பயணியாக துபாய் சென்றுவிட்டு வந்தனர். அவர்களது உள் ஆடையில் தங்க கட்டிகள் இருந்தன. இருவரிடம் 944 கிராம்  எடை உடைய பறிமுதல் செய்தனர் 38.7 லட்சம். விமான நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.


Tags : airport Smuggling ,airport , Airport, gold, 3 arrested
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்