×

மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு திரும்ப பெற்றது பாஜவின் அரசியல் வஞ்சம் தீர்க்கும் செயல்

சென்னை:தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை:  திமுக என்பது தமிழகத்தில் பிரதான அரசியல்  கட்சியாகும். அடுத்து அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்புள்ள கட்சியின் தலைவருக்கு பல்வேறு அரசியல் அச்சுறுத்தல்கள் இருப்பது இயற்கையே.  எனவே தான்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் சோனியாகாந்தி,  ராகுல்காந்தி, பிரியங்கா போன்றவர்களுக்கு மத்திய அரசின் உச்சக்கட்ட பாதுகாப்புகள் அளிக்கப்பட்டு வந்துள்ளன. எந்த முகாந்திரமும் இல்லாத  நிலையில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா போன்றவர்களுக்கான உச்சக்கட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இப்போது மு.க.ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார். பாஜவின் மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை எதிர்த்து  இந்தியாவில் குரல் கொடுத்து வருபவர்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளவர் மு.க.ஸ்டாலின் என்பதால், அவருக்கு வேறு வழியில் நெருக்கடி  தரமுடியாத சூழ்நிலையில். அவருக்கான உசக்கட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது கண்டனத்திற்குரியதாகும்.


Tags : withdrawal ,MK Stalin ,Baja , MK Stalin, Defense, BJP
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...