×

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: பைனலில் பிளிஸ்கோவா

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-7 (10-12), 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 48 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பெத்ரா குவித்தோவாவை (செக்.) வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிளிஸ்கோவா - கீஸ் மோதுகின்றனர்.

செரீனா முன்னேற்றம்: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பைனலில் விளையாட அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றார். அரை இறுதியில் சக வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதிய செரீனா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 3-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார். பைனலில் செரீனா - பெகுலா மோதுகின்றனர்.

Tags : Brisbane International Tennis, Pliskova
× RELATED அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு