×

நியூசிலாந்து டூர்: இந்திய அணி இன்று தேர்வு

மும்பை: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இலங்கை அணியுடன் நடந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது. முதல் போட்டி மும்பையில் ஜன. 14ம் தேதியும், 2வது போட்டி ராஜ்கோட்டில் 17ம் தேதியும் நடக்க உள்ளன. கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் 19ம் தேதி நடக்க உள்ளது.

இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. கடினமான இந்த தொடர்களுக்கான இந்திய அணிகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில், அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வரும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா ஏ அணியும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதால், அவசியம் ஏற்பட்டால் மாற்று வீரர்களை சேர்ப்பது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Indian ,New Zealand Tour ,team , New Zealand, Indian team
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...