சில்லி பாயின்ட்...

* கர்நாடகா அணியுடனான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி 2 விக்கெட் இழப்புக்கு 296 ரன் குவித்துள்ளது. செதேஷ்வர் புஜாரா 162 ரன், ஷெல்டன் ஜாக்சன் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் தர போட்டிகளில் புஜாரா விளாசிய 50வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்களில் அவர் 9வது இடத்தை பிடித்துள்ளார். கவாஸ்கர், சச்சின் இருவரும் தலா 81 சதங்கள் விளாசி முதலிடத்தில் உள்ளனர்.

* ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ஸ்பெயின், செர்பியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

* நட்சத்திர வீரர் எம்.எஸ்.டோனி நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், இதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நேற்று தனது 47வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்.

*  கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு, முழங்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Related Stories:

>