×

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

சென்னை: பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணைய அலுவலகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் ேததி (இன்று) முதல் 21ம் தேதி வரை இயக்கப்பட உள்ள ஆம்னிப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்து மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை (1800 425 6151) மூலம் புகார் தெரிவிக்கலாம். மேலும் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகன சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் 22,295 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராத தொகையாக ரூ.4,64,06,750 நிர்ணயிக்கப்பட்டது. வாகன வரியாக தொகை ரூ.1,15,94,095 மற்றும் வரியாக ரூ.32,15,818 நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.8,33,39,788 அரசு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் 2,224 வாகனங்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு தணிக்கை போலவே, வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து துறையின் மூலம் தமிழகம் முழுவதும் இயங்கும் ஆம்னிப் பேருந்துகளில் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்க சரக அளவில் பல்வேறு குழுக்கள் இணைப் போக்குவரத்து ஆணையர், துணைப் போக்குவரத்து ஆணையர், தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு செயலாக்கப் பிரிவின் மூலம் சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணத்திற்கும் போக்குவரத்து துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Omni ,Transport commissioner ,passengers , Surcharge, Charges, Omni buses, Transport Commissioner, Warning
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி