×

நாமகிரிப்பேட்டை அருகே பொங்கல் பானை தயாரிப்பு மும்முரம்: ரூ.70 வரை விற்பனை

நாமகிரிப்பேட்டை: பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ளதால், நாமகிரிப்பேட்டை அடுத்த  ஆர்.புதுப்பட்டியில் மண்பானை தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாமகிரிப்பேட்டை  அடுத்த ஆர்.புதுப்பட்டியில், சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொங்கல் பானை, அகல் விளக்கு, தண்ணீர் பானை, மண் அடுப்பு உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் அழகாகவும், உறுதியாக இருப்பதால்  நாமக்கல், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள்,  பொதுமக்கள் நேரடியாக வந்து வாங்கிச்செல்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ளதால் பொங்கல் பானை, மண் அடுப்பு தயாரிப்பு பணிகளில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மண்  பானை தொழிலாளர்கள் கூறியதாவது: சுமார் 4 தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். ஏரி, குளத்தில் இருந்து எடுக்கப்படும் கலிமண் கொண்டு தயாரிக்கிறோம். சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கடைக்காரர்கள், பொதுமக்கள் நேரடியாக வந்து  வாங்கிச்செல்கின்றனர். பொங்கல் பனை சிறியது ரூ.40  முதல் ரூ.50 வரையும், பெரியது ரூ.60 முதல் ரூ.70 வரையும் விற்பனை  செய்யப்படுகிறது. இந்த தொழிலை செய்ய போதிய இடவசதி  இல்லாததால் சாலையிலேயே பானையை தயாரித்தும், வெயிலில் காய வைக்கும் நிலை உள்ளது. வாகனங்களால் அடிக்கடி பானைகள் சேதமடைகிறது. ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தனி இடம் ஒதுக்க  வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Namagiripettai Namagiripettai , Namagiripettai, Pongal pot, for sale
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...